இரண்டாம் திருமணம்?…. உங்க உறவே வேண்டாம்…. முன்னாள் மனைவியை பழிவாங்க….. நடிகர் தனுஷ் போட்ட பக்கா பிளான்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் நுழைந்துள்ளார். அவ்வகையில் அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரேட் மேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களாக தனது திரைப்படங்கள் ஹிட் கொடுக்காததால் வருத்தத்தில் இருந்து வந்த தனுஷ் அதனை ஏறக்குறைய தற்போது சரி செய்து விட்டார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அந்த திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. தனுஷ் அண்மையில் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் அதன் பிறகு தனது கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விவாகரத்தான தனுஷ்க்கு இரண்டாம் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்களாம்.அதற்கான ஏற்பாடுகள் நடப்பதை அறிந்து கொண்ட தனுஷ் பிடிவாதம் பிடித்து வேண்டவே வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டாராம். அதுமட்டுமல்லாமல் அப்படி செய்தால்உறவே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார் தனுஷ். விவாகரத்திற்கு பிறகு முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை தன் வெற்றியால் பழிவாங்க நடிகர் தனுஷ் துடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.