செம க்யூட்…. தனது மகளுடன் விமானத்தில் பயணித்த நடிகர் விமல்…. இதுவரை பலரும் பார்த்திராத அழகிய புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் விமல். இவர் நடிப்பில் வெளியான பசங்க மற்றும் களவாணி உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இந்தத் திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த விமல் சமீப காலமாக சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றார்.

இருந்தாலும் அவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவருக்கு பல பாராட்டுகளும் குவிந்தன. பல திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விமல் அவரின் மகள் ஆத்மிகாவுடன் விமானத்தில் சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், யாளினும் இனிய என் மகளுடன் தனித்து பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ? என்று குறிப்பிட்டுள்ள விமல் அந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகர் விமலுக்கு இவ்வளவு க்யூட்டான மகளா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.