சிலுக் ஸ்மிதா கடிச்ச ஆப்பிளை ஏலம் விட்டாங்க… என்ன விலைக்கு போச்சுன்னு தெரியுமா?

ஆந்திராவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. நடிகர் வினுசக்ரவர்த்தி, அவர் டைரக்ட் செய்த ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் அவரை ‘சில்க்’ என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார். அந்த கேரக்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால், விஜயலட்சுமி என்ற பெயர் கொண்ட அவர் ‘சில்க் ஸ்மிதா’ வாக மாறினார்.

சில்க் ஸ்மிதாவின் காந்த ஈர்ப்பு கொண்ட கண்களும், அசத்தலான நடனமும், கவர்ச்சியான தோற்றமும், யதார்த்தமான நடிப்பும் எளிதில் ரசிகர்களை கட்டிப் போட்டது, கடந்த 80,90 களில், எந்த படம் வந்தாலும், அதில் நிச்சயம் சில்க் ஸ்மிதாவின் நடனம், கண்டிப்பாக இருக்கும். அந்த அளவுக்கு பேமஸாக இருந்தார். ஹீரோக்களுக்கு தந்த முக்கியத்துவம், தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவுக்கு தரப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில், சில்க் ஸ்மிதா பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில், லஞ்ச் நேரத்தில், ரிலாக்ஸாக அமர்ந்திருந்த சில்க் ஸ்மிதா ஒரு ஆப்பிளை எடுத்து கடித்துவிட்டு, அங்கிருந்த சிறிய டேபிள் மீது வைத்திருக்கிறார். அடுத்த சில விநாடிகளில், அந்த ஆப்பிள் காணாமல் போய்விட்டது. அங்கிருந்த ஒரு நபர், சில்க் கடித்த ஆப்பிளை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்.

இதையடுத்து, சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் என்று, படப்பிடிப்பு தளத்திலேயே ஆப்பிளை வைத்து ஏலம் விட்டு இருக்கின்றனர். ஆப்பிள் கிலோ ரூ. 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட அப்போது, சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள், 200 ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. இதைப் பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பலரும் ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.