மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு இந்த பிரபல நடிகர் இப்படி ஒரு உதவியை செய்தாரா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

சினிமாவில் நடிக்க, சென்னைக்கு வந்த மாரிமுத்து. துவக்கத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தார். அதன்பின் இயக்குநர் வசந்த் தின் உதவி இயக்குநராக பணிசெய்தார். தொடர்ந்து கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை மாரிமுத்து இயக்கினார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து சில படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கொம்பன், மருது போன்ற படங்களில், இவரது நடிப்பு பேசப்பட்டது. இவர் நடித்த கடைசி படம் ஜெயிலர்.சினிமாவை விட, எதிர்நீச்சல் என்ற சீரியலில், ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மாரிமுத்து நடித்து, அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். மாரிமுத்துவின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களுக்கு, வெகு எளிதாக பிடித்துவிட்டது. மாரிமுத்து உதவி இயக்குநராக இருந்த போது, இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் இன்றைய பிரபல நடிகர், இயக்குநர் எஸ்ஜே சூர்யா. ஆசை, நேருக்கு நேர் போன்ற படங்களுக்கு, எஸ்ஜே சூர்யாவும், மாரிமுத்துவும் ஒன்றாக பணிசெய்துள்ளனர். அப்போது, நெருங்கிய நண்பர்களாக பழகினர். எஸ்.ஜே சூர்யா வாலி, குஷி படங்களை எடுத்த போது அந்த படங்களில் மாரிமுத்து, உதவி இயக்குநராக இருந்திருக்கிறார்.ஒருமுறை, மாரிமுத்துவின் மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துமனையில் இருந்திருக்கிறார். மருத்துவ செலவுகளுக்கு மாரிமுத்து, கையில் பணமின்றி சிரமப்பட்ட நிலையில், எஸ்ஜே சூர்யாவிடம் இதுபற்றி அவர் சொல்லவில்லை. ஆனால், இந்த விஷயம் அறிந்த ஜே சூர்யா, மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவ செலவுகளுக்கான பில் கட்டணத்தை கட்டிவிட்டுச் சென்றுள்ளார். அதுவும், பில்லுக்கு மேல் கூடுதலாக சில ஆயிரங்களை கூடுதலாக சூர்யா கட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் . எஸ்ஜே சூர்யாவின் இந்த உயர்ந்த குணத்தை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.