“இன்னும் ஷூட்டிங்கே முடியல”…. அதுக்குள்ள 180 கோடி வசூல் அள்ளிய வாரிசு திரைப்படம்…. எப்படி தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் சூட்டிங் இன்னும் முடியாத போது அப்படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது வாரிசு படத்தின் சாட்டிலைட் உரிமை 50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை 60 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 32 கோடி, இந்தி டப்பிங் உரிமை 32 கோடிக்கும், ஆடியோ உரிமை 10 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.இதன் மூலமாக படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 184 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத்தின் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளின் திரையரங்க வெளியீட்டு உரிமை இன்னும் விற்பனை செய்யப்படவில்லை. அது விற்கப்பட்டால் இதன் மூலமாக 100 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் ரிலீசுக்கு முன்பே 80 கோடிக்கு மேல் லாபம் பார்த்து உள்ளதால் தயாரிப்பாளர் படு குசியில் இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.