நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல…. உண்மையை கூறிய அம்மு ராமச்சந்திரன் ……

தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி தான் அம்மு ராமச்சந்திரன். இவர் தொகுப்பாளனியாக மட்டுமல்லாமல் சினிமா மற்றும் சீரியலிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கினார்.

அதுமட்டுமல்லாமல் ஜெயா டிவி மற்றும் சன் தொலைக்காட்சி. ஆகியவற்றில் பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞரும் தான். இவர் நடித்த பெரும்பாலான சீரியல்கள் இவருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல பெயரை தேடி கொடுத்தது. ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் இவர் நடித்துள்ளார்.

மந்திரப்புன்னகை என்ற திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது நடிப்புக்கு சற்று பிரேக் எடுத்திருக்கும் அம்மு ராமச்சந்திரன் தனது தனிப்பட்ட வாழ்க்கையை கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவரின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.