தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட. எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசங்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான்.

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இரண்டு மாதங்களாக இப்ப படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை கூல் சுரேஷ் தீவிரமாக செய்து வந்தார். எந்த ஒரு படம் வந்தாலும் அல்லது எந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றாலும் அதில் முதலில் வெந்து தணிந்தது காடு படத்தை வைத்து அளவு பஞ்ச் வசனம் பேசியுள்ளார். இதனிடையே வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கூல் சுரேஷ் நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக வழங்கியது மட்டுமல்லாமல் அவரின் பிள்ளையின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

இந்நிலையில் புதிய பதிவு ஒன்றை கூல் சுரேஷ் வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தை காலையில் வாக்கிங் சென்றதாகவும் இதுவரை திரும்பவில்லை எனவும் தனது தந்தையை காணவில்லை என கூறியுள்ளார்.மேலும் தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவியுங்கள் என்று அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
