இவருக்கா இப்படி ஒரு நிலை?…. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகர்…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!

மலையாள திரை உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தவர் பிரபல நடிகர் சீனிவாசன். ஹீரோவாக இல்லாவிட்டாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதாசிரியர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட இளைஞராக வளம் வருகிறார்.

இவருக்கு வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே தனது தந்தையைப் போல மலையாள திரை உலகில் இயக்குனர் மற்றும் நடிகர்களாக கலக்கி வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதை இவர் குறைத்துக் கொண்டார் நடிகர் சீனிவாசன். அதற்கு காரணம் என்னவென்றால் இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவர் பரிதாப நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மனதை கலங்கடித்தது. நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் உடல் நல குறைவு காரணமாக உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் மாறி உள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.