மாமன்னன், விடுதலை படங்கள் ஆஸ்கர் விருது தேர்வுக்கு மறுக்கப்பட்டது ஏன் – காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

மத்திய அரசு சார்பில், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்க, மலையாள படம் 2018 அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தமிழில் சில நல்ல படங்கள் இருந்தும் அந்த படங்களை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆஸ்கர் விருது போட்டிக்கான படங்களை தேர்வு செய்ய, மத்திய அரசு, தேர்வுக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த குழு உறுப்பினர்கள், நல்ல படங்களை பார்த்து, அதை ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்புவது, ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது.மத்திய அரசின் இந்த தேர்வுக்குழுவில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த தயாரிப்பாளர், இயக்குநர் மாதேஷ் இடம்பெற்றுள்ளார். சினிமா காஸ்ட்யூமர் வாசுகி பாஸ்கர், சினிமா எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத் ஆகியோரும் உள்ளனர். ஆனால், தமிழ் சினிமா எதுவும் ஆஸ்கர் விருது தேர்வுக்கு அனுப்பப்படவில்லை. மாறாக, மலையாள படம் 2018, அனுப்பப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்து, ரசிகர்களின் அதிக கவனத்தை பெற்ற மாமன்னன், விடுதலை, ராக்கி போன்ற படங்கள், ஆஸ்கர் விருது தேர்வுக்கான பெயர் பட்டியலில் இருந்தும், அந்த படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.இதற்கு பின்னணியில் இருப்பது அரசியல் காரணங்கள் என தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு, தமிழ் படங்களை அனுப்பும்போது, அந்த படங்களை வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பார்க்கும் வாய்ப்புள்ளது. அப்போது இந்த படங்கள், அரசுக்கு எதிரான கருத்துகளை நிச்சயம் கொண்டிருக்க கூடாது. அப்படி இருக்கும் படங்களை தேர்வுக்குழு புறக்கணிக்க வேண்டும் என்பதால்தான் மாமன்னன். விடுதலை போன்ற படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.