மகளாக நடித்த பெண்ணுடன், ஜோடியாக நடிக்க மாட்டேன் – ரஜினிக்கு சூடு வைத்த விஜய் சேதுபதி

சமீபத்தில், நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி மறுத்தது, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீரோ, வில்லன் என எந்த கேரக்டர் என்றாலும், தனது திறமையை மட்டுமே வெளிப்படுத்த நினைக்கும் விஜய் சேதுபதி, இதுபோன்ற ஒரு மறுப்பை தெரிவித்தது, கோலிவுட்டில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு அவர் சொன்ன காரணத்தை அறிந்த பிறகுதான், உண்மையிலேயே விஜய் சேதுபதி ஒரு ஜெண்டில் மேன் என பலரும் பாராட்டினர்.புது படம் ஒன்றில் ஹீரோவாக கமிட் ஆன விஜய் சேதுபதியிடம், இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் என படத்தின் இயக்குநர் கூறியிருக்கிறார். அதை கேட்டவுடன் மறுப்பு தெரிவித்த விஜய் சேதுபதி, உப்பேன்னா என்ற தெலுங்கு படத்தில், கீர்த்தி ஷெட்டி மகளாகவும், நான் தந்தையாகவும் நடித்திருந்தேன். அப்போது, மகளாக நினைத்த அந்த பெண்ணுடன் இந்த படத்தில், நான் காதல் வசனம் பேசி என்னால் நடிக்க முடியாது. அதனால்தான், அவருக்கு ஜோடியாக நடிக்க மறுக்கிறேன், என தெளிவுபடுத்தி இருக்கிறார்.விஜய் சேதுபதி, தனிப்பட்ட முறையில் இந்த கருத்தை கூறியிருந்தாலும் இதை கேள்விப்பட்ட பலரும், இந்த விஷயத்தில் ரஜினியை கிண்டலடித்து வருகின்றனர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், மீனா 10 வயது பெண்ணாக, சிறுமியாக ரஜினியுடன் நடித்திருப்பார். அந்த மீனாவுடன் எஜமான், முத்து, வீரா போன்ற படங்களில், ரஜினி ஜோடியாக நடித்திருந்தார். அதுவும் நெருக்கமான காதல் காட்சிகளில் மீனாவுடன் அவர் நடித்தது எல்லாம் ரொம்பவும் ஓவர்தான், என ரஜினியை கலாய்த்து வருகின்றனர். விஜய் சேதுபதி போல ரஜினிகாந்த் இப்படி பெருந்தன்மையாக யோசிக்கவில்லையே எனவும், ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.