விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதில் கலந்து கொண்ட ஜிபி முத்துவிற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வந்தனர்.ஆனால் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜி பி முத்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதனைப் போலவே வாக்குகள் குறைவாக பெற்று நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். முதல் நாளிலிருந்து பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நாள்தோறும் நடந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களிலும் பல கலாட்டாக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் மக்கள் விரும்பிய பல போட்டியாளர்களும் இடம் பெற்றுள்ளனர். அதிலிருந்து யார் வெளியேறுவார் என தெரியவில்லை. ஆனால் ஓட்டிங் விவரம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் ரட்சிதா, ஜனனி, அசல், மகாலட்சுமி, ஆயிஷா, அசீம், ஏ டி கே என ஏழு பேர் உள்ளனர்.

அதில் தற்போது வரை குறைவான வாக்குகள் பெற்று அசல் கடைசி இடத்தில் உள்ளார். அவர் மீது கடந்த சில நாட்களாக மக்களுக்கு கோபம் உள்ளது.அதாவது பெண்களிடம் அவர் தவறாக நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டை எழுந்த நிலையில் அவருக்கு வாக்குகளும் தற்போது குறைவாக வந்துள்ளது. இருந்தாலும் இந்த வாரம் யார் வெளியேறுவார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.