உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 அண்மையில் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இதனிடையே பொன்னியின் செல்வன் பட குழுவினர் திரைப்பட ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல்வேறு மாநிலங்களில் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா மற்றும் சோபிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.அதாவது அனைவரும் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு ஒருவர் சொல்லும் வார்த்தையை சரியாக கேட்டு மற்றவருக்கு சொல்ல வேண்டும்.

அந்நிகழ்ச்சியில் சோபிதா குர்தா என்று சொல்ல அதனை கேட்ட திரிஷா விக்ரமிடம் கூறினார். ஆனால் அப்போது த்ரிஷா கூறிய வார்த்தை கெட்ட வார்த்தை போன்று இருந்தது. திரிஷாவின் உதடு அசைவை பார்த்து அந்த வார்த்தையை கேட்ட விக்ரம் பயங்கர ஷாக் ஆகினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில் விக்ரமின் ரியாக்ஷனை அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ரசித்து வருகிறார்கள்.
Vikram ???? pic.twitter.com/E8r7hO5gH2
— ராஸ்கல் (@Rascal1_) October 4, 2022