“இவதான் என் காதலி”…. முதன்முறையாக காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த ஹரிஷ் கல்யாண்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன்தான் ஹரிஷ் கல்யாண்.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் நடிகை அமலாபாலும் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.நடிப்பில் தற்போது 100 கோடி வானவில் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே ஹரிஷ் கல்யாண் குறித்து பலவித காதல் கிசுகிசுக்கள் அவ்வபோதை இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதன்முறையாக தனது காதலியுடன் ஜோடியாக கைகோர்த்து இருக்கும் அழகிய புகைப்படத்தை கரிஷ் கல்யாண்வெளியிட்டார். இதன் மூலமாக முதன் முறையாக தனது காதலை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது காதலியின் புகைப்படத்தை ஹரிஷ் கல்யாண் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.மேலும் அவரின் பெயர் நர்மதா உதயகுமார் எனவும் குறிப்பிட்டுள்ள ஹரிஷ் கல்யாண் அவர் என்ன செய்கிறார் திருமணம் எப்போது என்கிற தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இதனிடையே நர்மதா ஐடி கம்பெனியில் பணியாற்றி வருவதாகவும் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது