சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகை ஆன ரட்சிதா மகாலட்சுமி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். அவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மைக்காலமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததாக இணையத்தில் தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார் ரட்சிதா தனது கணவர் பற்றி ஏதாவது பேசுவார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் தனது கணவர் குறித்து எதுவும் பேசவில்லை. பிக் பாஸ் ஓப்பனிங் விழாவில் தன் அப்பா மற்றும் அம்மா குடும்பம் பற்றி மட்டுமே பேசி இருந்தார். தனது கணவர் தினேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

இதன் மூலம் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெறுவது உறுதி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களிடம் பேசிய ரக்ஷிதா தான் கணவருடன் சந்தித்த பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.அதாவது ரக்ஷிதா சம்பாதிக்கும் பணத்தை அவரின் அப்பா அம்மாவுக்கு கொடுக்கக் கூடாது என்று தினேஷ் பிரச்சனை செய்தது பற்றி அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பிரச்சினையை நான் அதிகம் பார்த்து விட்டேன்,அதனால் அவர்களுக்கு என்று ஒரு படம் இருக்க வேண்டும் என சொல்லிவிட்டேன்,நான் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அதை எனக்கு கொடுக்காதீர்கள் என அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டேன் என ரட்சிதா தெரிவித்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.