தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என அனைத்திலும் அசத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் நடித்த ஹாலிவுட் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தமிழில் இவர் சமீபத்தில் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் கட்டாயம் வெற்றியை அடைய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக மித்ரன் ஜவகர் நடிகர் தனுசை வைத்து யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் மற்றும் குட்டி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதில் மறைந்த நடிகர் விவேக் மற்றும் தனுஷ் இருவரும் வேலையில்லா பட்டதாரி, உத்தமபுத்திரன் மற்றும் படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விவேக் இறப்பதற்கு முன்பு இயக்குனர் மித்ரன் பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில், இயக்குனர் மித்ரன் நல்ல திறமையான இயக்குனர்.
Vivek would have been the happiest one, on seeing the movie's reception❤@MithranRJawahar @dhanushkraja #Thiruchitrambalam pic.twitter.com/2CclMiAGIe
— Sabari (@sab_Offl) August 20, 2022
அவர் நிறைய படங்களை இயக்க வேண்டும் என்றும் அவருக்கு தனுஷ் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் விவேக் பேசி இருந்தார். இதனிடையே விவேக் சொன்னதைப் போல தற்போது நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் மித்ரனுக்கு வாய்ப்பளித்துள்ளார் . அதன்படி விவேக்கின் ஆசையை திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் தனுஷ் நிறைவேற்றியுள்ள நிலையில் அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
