விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளன.இதில் பெரும்பாலும் நாம் பார்த்த முகங்களை அதிக அளவு கலந்து கொண்டுள்ளனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனிடையே அண்மையில் பிக் பாஸ் வீட்டிற்கு மைனா நந்தினி புது போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு செய்யும் பல விஷயங்கள் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.அவர் ஆயிஷா மற்றும் குயின்ஷி போன்றவர்களிடம் முகம் சுளிக்கும் விதமாக பல விஷயங்களை செய்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரை உடனே வெளியே அனுப்புங்க எனவும் கமல்ஹாசன் அவர்கள் இவரை கண்டிக்க வேண்டும் எனவும் கமெண்டு செய்து வந்த நிலையில் தற்போது மைனா நந்தினியிடம் அவர் தகாதவாறு சில விஷயங்களை செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
