கொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த நடிகர் விஜய்..!! 6 மாநிலங்களுக்கு சேர்த்து எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா?

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக மத்திய மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் தாராளமாக தரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக தற்போது நடிகர் விஜய் ரூ. 1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

அதில், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார். திரைப்பட தொழிலாளர்களுக்கு (ஃபெப்சி) 25 லட்சமும், கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ ரசிகர் மன்றங்களுக்கும் நடிகர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார்.


ஏற்கெனவே நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவியும், சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவியும், ராகவா லாரன்ஸ் 3 கோடியும், அம்மா உணவகத்திற்கு 25 லட்சமும் அளித்திருந்த நிலையில் நடிகர் விஜய் ரூ. 1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இதையடுத்து, மற்ற மொழி திரைப்பட நடிகர்கள் மக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் நிலையில்
தமிழ் நடிகர்கள் கிள்ளிக்கொடுப்பதால் ரசிகர்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர். மிக தாமதம் ஏன் என பல நெட்டிசன்களும் விஜய் ட்ரோல் செய்கின்றனர்.ஆனாலும், லாரன்ஸ், மற்றும் ஒரு சில நடிகர்கள் அன்றாட உதவியை தொடர்ந்து செய்து வருவதால் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.