நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் தீவிர கண்காணிப்பும், ஊரடங்கின் மூலம் தடுப்பு முறைகளும் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெண் ஒருவர் செய்துள்ள காரியம் சிசிடிவி காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கோடா மாவட்டம் வல்லவ்பாடி பகுதியில் பெண் ஒருவர் பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி அதனை வீடுகளுக்குள் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ள சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ