“உங்களை நேர்ல பார்க்கணும் ஆ சை யா இருக்கு” என்று காதலி சொல்லவும், உடனே கிளம்பி வா என்றார் இளைஞர்.. அதன்படி ஃபேஸ்புக் காதலனை சந்திக்க இலங்கையில் இருந்து பண்ருட்டி வந்தார் இளம்பெண்.. இப்போது 2 பேரையும் காணோம்.. எங்கே என்றே தெரியவில்லை.. போலீசார் தே டி கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன், இவர்கள் குடும்பத்துடன் குவைத்தில் வேலைபார்த்து வருகிறார்கள். இவரது மகள் ரிஸ்வி பாத்திமா.. 21 வயதாகிறது. இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் முபாரக் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்குள் நாளடைவில் காதலும் ஏற்பட்டது.. ஃபேஸ்புக் மூலமாகவே காதலும் வளர்ந்தது. ஒருநாள் பாத்திமா, தன்னுடைய காதலன் முபாரக்கிடம், “உங்களை நேர்ல பார்க்கணும் ஆசையா இருக்கு” என்று சொல்லி உள்ளார். முபாரக்கும் அதற்கு சரி என்று சொல்லி உள்ளார்.

உடனே பாத்திமா கடந்த 26-ந் தேதி டூரிஸ்ட் விசா எடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு ஃபிளைட் பிடித்து வந்துவிட்டார். பிறகு 2 பேரும் சென்னையில் சந்தித்து கொண்டனர்.. அங்கிருந்து பண்ருட்டி வந்தனர். பாத்திமா பண்ருட்டி வந்தபிறகுதான் அவருடைய பெற்றோருக்கே அங்கு தெரியவந்தது.. உடனடியாக குவைத்தில் இருந்து அவ ச ரமாக அவரது அப்பா கிளம்பி வந்தார்.

தமமுக அமைப்பை தொடர்பு கொண்டு நடந்த விவரம் குறித்து எடுத்து சொன்னார்.. இதையடுத்து, காதலனின் அட்ரஸ் வாங்கி கொண்டு, தமுமுக பண்ருட்டி நகர செயலாளர் அலாவுதீனை தொடர்பு கொண்டு பேசினர். இறுதியாக அவரது உதவியுடன் பாத்திமாவின் அப்பா ஜெயினுலாபுதீன், கடலூர் மாவட்ட எஸ்பியிடம் மகளை கண் டு பி டித்து தருமாறு புகார் தந்தார்.
இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எ டு ப் பதாக நம்பிக்கை தரப்பட்டுள்ளது.. முபாரக் இப்போ தை க் கு அந்த கிராமத்தில் இல்லை.. பாத்திமாவும் காணோம்.. 2 பேரும் எங்கே மா ய மா கி விட்டார்கள் என தெரியவில்லை.. அதனால் அவர்களின் போட்டோக்களை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.இலங்கையில் காதலனை தேடி வந்த இப்போது மா ய மா கி உள்ளது ப ர ப ர ப் பை தந்து வருகிறது.