அடேங்கப்பா.., இப்படியும் ஒரு லீவ் லெட்டர்..?? மாணவனுக்கு குவியும் பாராட்டு..!! அப்படி அதில் என்ன எழுதினார் எனத் தெரியுமா..??

நம் பள்ளிக்கால லீவு லெட்டர் அத்தனையிலும் இடம் பிடிக்கும் பிரதான வாசகமே “ஐ ஆம் சபரிங் ப்ரம் பீவர்” இதுதான் பார்மெட். ஆனால் இந்த வழக்கமான வார்த்தையைத் தூ க்கி குப்பையில் போட்டுட்டு நேர்மையாய் ஒரு உண்மைக்காரணத்தை சொல்லி மாணவன் எழுதிய விடுப்பு க்கடிதம் சோசியல் மீடியாக்களில் செம வைரல் ஆகிவருகிறது.

இந்நிலையில் , திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் மேலநாதநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு தீபக் என்னும் சிறுவன் எட்டாம்வகுப்பு படித்து வருகிறான். இவனது தந்தை விஜயராகவன் ஆட்டோ ஓட்டுனர். தீபக் ஆசிரியர்களிடம் கீ ழ்ப டிதல் தொடங்கி, படிப்பு வரை அத்தனையிலும் குட்பாய்!

தீபக் நேற்று முன் தினம் ஸ்கூலுக்கு லீவு எடுத்திருக்கிறான். இதற்காக தனது கிளாஸ் டீச்சருக்கு அனுப்பியுள்ள லீவ் லெட்டரில், ‘நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை இரவு முழுவதும்  பார்த்ததால் உ டல் சோ ர்வா க உள்ளது. எனவே எனக்கு ஒருநாள் விடுப்பு வேண்டுமென மிகவும் பணிவுடன் கேட்டுக் கொ ள்கிறேன்.’ எனக் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணவனுக்கு ஸ்கூலில் அவனது கிளாஸ் டீச்சரும் லீவுக்கு ஒ ப்புதல் கொடுத்துள்ளார்.

கூடவே மாணவனின் கிளாஸ் டீச்சர் மணிமாறன் இதுகுறித்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் போ ட மாணவனின் நேர்மைக்கு லைக்கும், ஆசிரியரின் தோழமை உணர்வுக்கு ஹார்ட்டினும் விட்டு அ ச த்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.