எனக்கு 41 வயதாகிறது !! ஆனால் இதற்காக மனைவியிடம் எனக்கு 15 வருடம் தேவைப்பட்டது !! வேதனையுடன் பேசிய விஜய் சேதுபதி !!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது திறமையை தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் விதமாக நடித்து வளர்ந்து வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிகனாக இருப்பதாலே இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உருவானது.மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, ஏழைய எளிய மக்களுக்கு உதவும் மனம் கொண்டவர்.

இவர் தற்போது விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், லாபம் போன்ற படங்களிலும் மற்றும் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் அண்மையில் பிரபல கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அப்போது விழாவில் பேசிய சேதுபதி தனது சினிமா பயணத்தில் நடந்த சுவாரசியமான பல நிகழ்வுகல்ளை பகிர்ந்து கொண்டார்.

அதில் குறிப்பாக பேசும் பொழுது “நான் தொட்டு தாலி கட்டின என் மனைவியை புரிந்து கொள்ள எனக்கு 15 வருடங்கள் ஆனது. பெண்ணை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. அதனால் எந்த ஒரு பெண்ணிடமும் போட்டி போடாதீர்கள், எந்த ஒரு பெண்ணையும் சீப்பாக பேசாதீர்கள் என்று வெளிப்படையாக கூறினார்.