பள்ளி வாகனத்தில் மாதவிடாய் ஏற்பட்ட இளம்பெண்ணுக்கு சமயோசிதமாய் உதவிய சக மாணவன்!

முகநூலில் குர்கான் மாம்ஸ் என்ற க்ரூப்பில் பெண் ஒருவர் மேற்கொண்டிருந்த பதிவு தற்போது அதிகளவில் வைரலாகி வருகிரது.பொதுவாகவே பெண்களின் மாதவிடாய் என்பது நம் சமூகத்தில் ஒரு தீட்டு போல காணப்படுகிறது. எந்த மூன்று நாட்களில் அவர்களை பக்குவமாக பார்த்துக் கொள்ள வேண்டுமோ. அந்த நாட்களில் தான் அவர்களை வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்து, தனி பாயில் படுக்க வைத்து அராஜகம் செய்கிறது நம் சமூகம்.மேலும், பெண்களின் மாதவிடாய் குறித்து ஆண்கள் எள்ளளவும் அறிந்துக் கொள்ளாதபடி பேணிக் காக்கிறார்கள். இதனாலேயே பல ஆண்கள் பெண்களை பற்றி முழுவதுமாய் அறிந்துக் கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஒருவேளை பெண்களின் மாதவிடாய் வலி குறித்து அறிந்துக் கொண்டால், அவர்கள் மீது நல்ல மதிப்பு கூடும். அவர்களை கவர்ச்சி பொருளாக காணும் வன்மம், பார்வை குறையும். ஏன் கற்பழிப்பு குற்றங்கள் கூட குறையும் என்பது என் தனிப்பட்ட கருத்து.சரி! இங்க குர்கான் அம்மா ஒருவர் தன் மகளுக்கு மாதவிடாய் நாளில் உதவிய ஒரு குட்டி ஹீரோ.. அல்ல, அல்ல… ரியல் ஹீரோ பற்றி என்ன கூறி இருக்கிறார். தன் சமயோசித புத்தியால் மாதவிடாய் ஏற்பட்ட இளம்பெண்ணுக்கு உதவியுள்ளார்.குறித்த இளம்பெண்னின் அம்மா முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது,என் மகள் அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு பள்ளி பேருந்தில்திரும்பிக் கொண்டிருந்த போது பீரியட்ஸ் ஏற்பட்டது.

இதை என் மகளை காட்டிலும் ஒரு வயது மூத்த மாணவன் ஒருவன், அவள் ஆடையில் ஏற்பட்டிருந்த இரத்த கறையை கண்டு மாதவிடாய் ஏற்பட்டதை அறிந்திருக்கிறான். பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அந்த மாணவன், என் மகள் காதருகே வந்து. உன் ஆடையில் பின்னே இரத்த கறை ஏற்பட்டிருக்கிறது. நான் என் ஸ்வெட்டரை தருகிறேன். பேருந்தில் இருந்து இறங்கும் போது அதை உன் இடுப்பில் கட்டிக் கொண்டு வீட்டுக்கு பத்திரமாக செல் என்று கூறி இருக்கிறான்.முதலில் என் மகள் தர்மசங்கடமாக தான் உணர்ந்திருக்கிறார். ஆனால், அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு பரவாயில்லை என்று அந்த மாணவனிடம் என் மகள் கூற, அவனோ பதிலுக்கு.., எனக்கு தங்கைகள் இருக்கிறார்கள். இதெல்லாம் பரவாயில்லை.. நீ என் ஸ்வெட்டரை எடுத்து செல் என்று மேலும் கூறி என் மகளை பத்திரமாக பேருந்தில் இருந்து இறக்கிவிட்டிருக்கிறான்.

ஒருவேளை நீங்கள் அந்த மாணவனின் அம்மாவாக இருந்தால். உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் மகனால் நல்லப்படியாக வளர்த்துள்ளீர்கள். இந்த தலைமுறை இளைஞர்கள் மிகவும் மோசமானவர்கள். கெட்ட வழியில் பயணிக்கிறார்கள் என்ற செய்திகளே அதிகம் காதுகளுக்கு வருகின்றன. ஆனால், அவர்கள் நல்ல காரியங்களும் செய்கிறார்கள் என்பதை இந்த ஊரறிய வேண்டும் என்பதற்கே இந்த பதிவிடுகிறேன் என்று, அந்த தாய் தன் பதிவினை முடித்துக் கொண்டிருக்கிறார்.