நடிகை அனுஷ்கா, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான். தமிழில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக முன்ணணி நடிகையாக இருந்த இவருக்கு இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் மூலம் வந்தது ஆப்பு. டெடிகேஷன் என்று கூறிக் கொண்டு சீக்கிரமாக உடல் எடையை கூட்டி குண்டானார் அம்மணி.

படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், அம்மணியின் உடல் முன்பு போல இல்லை. குண்டாக இருந்த அவர் இப்போது உடல் எடை குறைத்த காரணத்தால் மேனியின் பளபளப்பு போ ய் விட்டது. இதனால், சொல்லும் அளவுக்கு வாய்ப்புகளும் இல்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாகுபலி நடிகர் பிரபாசு உடன் காதல் என கிசுகிசுக் கப்பட்டதை இருவருமே ம றுத்தனர். இதையடுத்து, தனது திருமணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம்,
![]()
திருமண பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டதாக அனுஷ்கா தெரிவித்திருந்தார். இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் என தற்போது புதிய தகவல் பரவி வருகிறது. அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடி, ஏற்கனவே திருமணமாகி வி வா கர த்தானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
