பிரபல காமெடி நடிகருக்கு கொரோனா வைரசா..?? இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு.கவுண்டமணி செந்தில் தொடங்கி வடிவேலு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும் இவர்களுக்கு துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் சில காமெடியன்களும் உள்ளனர்.

அதில் முக்கியமான ஒரு காமெடி நடிகராக வலம்வருபவர் போண்டா மணி. சீனா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டம் ஆடி வரும் நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது.இந்தியாவில் மூவருக்கு இதன் பாதிப்பு இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அவரது சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகைச்சுவை நடிகர் போண்டா மணி“கொரோனா வைரஸால்” பாதிக்கப் பட்டுள்ளதாக ஒரு YouTube சேனலில் தவறான தகவலை பரப்பியுள்ளனர்.இது முற்றிலும் வதந்தி! அவர் நலமாகவுள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்!தன்னைப் பற்றி தவறாக வரும் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என போண்டா மணி கேட்டுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.