தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார்.திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வந்த சினேகா அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.

மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் தான் அதிகமான படங்கள் நடித்துள்ளார்.தமிழில் இவர் அறிமுகமான திரைப்படம் என்னவளே.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பின்பு சினிமாத்துறையில் முன்னணி நடிகராக இருந்த பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவரும் இனைந்து அச் சமுண்டு அச் சமுண்டு திரைப்படத்தில் நடித்தார்.இந்த படத்தில் நடித்தபோது இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்தது.இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த தம்பதிக்கு மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது.தற்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளதாக தகவல் வெ ளியாகியது. இந்நிலையில் இன்று உலக மகளிர் தினம் என்பதால் சினேகா தனது பெண் குழந்தையுடன் மிக அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தீ யாய் பரவி வருகின்றது.