மொட்டை மாடியில் இறந்து கிடந்த கணவன்! நடுராத்திரி பூஜை! சாமியாருடன் சேர்ந்த மனைவி!

காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது இதற்கருகேயுள்ள பெரியார் 4-வது வீதியில் மணிமுத்து என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் பூமதி. இத்தம்பதியினருக்கு பிரவீனா என்ற மகளும், கமலக்கண்ணன் அரவிந்த் என்ற மகன்களும் உள்ளனர். நேற்று அதிகாலையில் மணிமுத்து அவருடைய வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரிக்க தொடங்கினர். ஆனால் மழையால் அவர்களால் எளிதாக சேகரிக்க இயலவில்லை.  இதனிடையே காவல்துறை அதிகாரிகளுக்கு பூமதியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கணவன் இறந்து கிடக்க அவருடைய அழுகை செயற்கையாக இருந்தது.

மேலும், மணிமுத்து தன் சகோதரி குடும்பத்தின் மீது வழக்கை திசை திருப்புவதற்காக முயற்சித்து வந்திருந்தார். காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையை தாங்க இயலாத பூமதி, ராமேஸ்வரம் சாமியார் வேல்முருகன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் குமார் ஆகியோருடன் இணைந்து தன் கணவனை இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற சாமியார் சிவகங்கைக்கு வந்து புதையல் எடுத்து தருவதாக கூறிக்கொண்டு இருந்தார்‌. அப்போதுதான் அவருக்கும், பூமதிக்கும் தொடர்பு ஏற்பட்டது.

மணிமுத்துவிற்கு நிரந்திரமாக வெளிநாட்டில் வேலை கிடைத்தது இவர்களுக்கு சாதகமாக போனது. எப்போதாவது வீடு திரும்பும் மணிமுத்துவிற்கு, இவர்களுடைய தொடர்பு குறித்து தெரியவில்லை. 5 வருடங்களுக்குப் பிறகு மணிமுத்து சென்ற வாரம் காரைக்குடிக்கு வந்தபோது அரசல் புரசலாக இது குறித்த செய்திகள் தெரிய வந்தன. இதனால் பயந்துபோன பூமதி, சாமியாரிடம் கூற

இதுதான் சமயம் என அமாவாசை நாளில் நடுராத்திரியில் 1 மணிக்கு ராமநாதபுரம் அல்லிக்கண்மாயில் அடைகளில்லாமல் பூஜையை நடத்திவிட்டு தன்னுடைய கூட்டாளிகளான பிரகாஷையும் அவனின் நண்பனான குமாரையும் தன்னுடைய காரிலேயே காரைக்குடிக்கு அழைத்து வந்து, அதிகாலை 3 மணியளவில் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை இப்படி செய்துள்ளனர்.