உலகம் முழுவதும் கொ ரோனா பரவுகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி மே மூன்றாம் திகதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். கொ ரோனா தற்காப்புக்காக அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர்கள் அவர்களது குடும்பத்தினரை விட்டு நமக்கு அந்த தொற்று பரவாமல் இருக்க போராடி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். பலர் உணவின்றி தவித்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் தங்க இடம் இன்றி வீதியில் படுத்து உறங்கும் ஆதரவு அற்ற மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். பசியால் வாடி சுருண்டு படுத்து கிடக்கும் நிலையில் அவர்கள் தவித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டி நகரில் வசித்து வரும் கமல் என்ற சமூகஆர்வலர் இந்த நிலையில் வாடி இருக்கும் ஆதரவற்ற சாலை ஓர மக்களை பார்த்து தன்னால் இயன்ற உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதன் பின் பசியால் வாடும் அந்த மக்கள் எங்கு உள்ளார்களோ அவர்களை தேடி சென்று 15 நாட்கள் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார்.

இப்படியான சூழலில் பட்டுக்கோட்டையில் முருகையா ஓட்டலில் இருந்து தினமும் 500லிருந்து 600 பேருக்கு இலவசமாக உணவு அளித்து வருகின்றனர். இது மாதிரியான ஓர் சூழ்நிலையில் இவர்களின் சேவை பாராட்டி இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.