விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.இவரைப் போலவே இவரின் அக்கா பிரியதர்ஷினி, சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

பிரியதர்ஷினி ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் , இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.இந்நிலையில் தனது கணவர் மற்றும் மகனுடன் பிரியதர்ஷினி எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் டிடி இன் அக்காவுக்கு இவ்வளவு பெரிய மகனாய் என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
