விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கான தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்காக நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் பட்டாளம் ஒன்று தனியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது.

அதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மற்ற சீசன்களை விட இந்த சீசனில் முதல் நாளிலிருந்து வீட்டில் பல சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த முறை கேப்டன் பதவி எதுவும் இல்லை என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலைகளை செய்து வருகிறார்கள்.

இதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ஜி பி முத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் 40 நாளில் நடப்பது எல்லாம் இந்த சீசன் நான்காம் நாளை நடக்கிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார். தற்போது ஒரு புதிய போட்டியாளர் வைல் கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார்.

அதாவது விஜய் டிவி மைனா நந்தினி தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவர் முதல் நாளே பிக் பாஸ் வருவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் தற்போது ஒரு வாரம் கழித்து தாமதமாக அவர் வைல்ட் கார்டு என்ரியாக வந்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.