பிக்பாஸ் சீசன் 6….. திருமணம் முடிந்த கையோடு உள்ளே நுழையும் பிரபல ஜோடி…. ரசிகர்கள் ஷாக்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.அதனால் எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.தற்போதைய தகவலின்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்வதால் இரண்டு போட்டியாளர்கள் சாதாரணமானவர்கள் மக்களின் சார்பாக முதல் முறையாக கலந்து கொள்ள உள்ளனர்.இதுவரை இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, தர்ஷா குப்தா, ஸ்ரீநிதி, நடிகை சில்பா மஞ்சுநாத் ஆகியோர் பிக் பாஸில் இடம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அண்மையில் திருமணம் முடிந்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் பலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் யூடியூப்ல மட்டும் பார்த்த எங்களை விரைவில் டிவியில பாருங்க, அதுவும் விஜய் டிவில பாருங்க என்று அவர்கள் போட்டுள்ள ஒரு பதிவும் வைரலாகி வருகிறது. அதனால் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்களோ என்று ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.