விவாகரத்திற்கு பின் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நடிகை சமந்தா…. ஆறுதல் கூறிய மாஜி கணவரின் நெருங்கிய உறவினர்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு சரும பிரச்சனை இருப்பதாகவும் அதனால் அவர் அமெரிக்க சென்ற சிகிச்சை பெற்று திரும்பியதாகவும் இணையத்தில் தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாகவே சமந்தா புதிய புகைப்படங்கள் எதையும் வெளியிடாமல் உள்ள நிலையில் ரசிகர்கள் இதனை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமந்தா அறிவித்துள்ளார்.கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே படத்திற்கு டப்பிங் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர், இன்னும் சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் கூட இந்த வலியை தாங்க முடியவில்லை,இருப்பினும் இதுவும் கடந்து போகும் என அவர் பதிவிட்டுள்ள நிலையில் அவரின் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சமந்தா அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இதனிடையே சமந்தாவுக்கு ஆறுதல் கூறி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் தம்பி அகில் அக்கினேனி முதல் ஆளாக ஆறுதல் கூறி கருத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.