பொதுவாக தொகுப்பாளினிகள் என்றாலே குரல் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சற்று வித்தியாசமான குரலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக கலக்கியவர் ஜாக்குலின். முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக களமிறங்கினார். இவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பி ஏ மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார். இந்நிலையில் தேன்மொழி சீரியலை முடித்த பிறகு விஜய் டிவி பக்கமே அவரை காணவில்லை. அதற்கு மாறாக வேறொரு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம். அது என்னவென்றால் அவர் கடுமையான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் பார்க்க உடல் எடையை குறைத்து அழகாக உள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார். அதில் முன்பு இருந்ததை விட உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம்மாக மாறி உள்ளார். எனவே ஜாக்குலின் விரைவில் உடல் எடையை குறைத்து சின்னத்திரை பக்கத்தில் வர உள்ளார். இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ஒன்றில் அவர் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
