தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வபோது தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்த நிலையில் அண்மையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நயன் மற்றும் விக்கி தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர். அவ்வகையில் நேற்று முன்தினம் தீபாவளி வாழ்த்து தெரிவித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் முதன்முறையாக தங்களின் இரட்டைக் குழந்தைகளை ரசிகர்களுக்கு காட்டினார்கள். இந்நிலையில் நயன்தாரா பாணியில் தனது தம்பி குழந்தையை கையில் ஏந்தியபடி விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அந்த வீடியோவை பதிவு செய்துள்ள பிரியங்கா அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து என தெரிவித்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.