புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி என்ற பகுதியை சேர்ந்த என்பவர் தமிழ் சீரியல் சேனல்களில் நடிகராக நடித்து வருகின்றார். இவரை பலரும் அறிந்திருப்போம். இவர் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதன் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரைப் போலவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சீரியல் நடிகை திவ்யா என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் தங்கி பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அதாவது மகராசி மற்றும் கேளடி கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இதனிடையே கேளடி கண்மணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது நைனா முகமது உடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு,நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்தையும் பதிவு செய்தனர்.

இந்நிலையில் திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நடிகை திவ்யா வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய காதல் கணவர் தன்னை அழித்து சித்திரவதைப்படுத்துவதாகவும் தங்களின் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களை வெளியிட்டதால் தன்னை தாக்கியதாகவும்,தனக்கு இப்போது பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதாகவும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) October 6, 2022
ஃலவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை திவ்யா
வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்கிறார். pic.twitter.com/DxyUY7HuyT
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) October 6, 2022