விருமன் பட பாடலுக்கு சாண்டியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட கலா மாஸ்டர்…. வேற லெவல் வீடியோ….!!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் கலா மாஸ்டர். அவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி டான்ஸ் ஷோவான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று மேலும் பிரபலம் ஆனார், அங்கு அவர் மூன்று நடுவர்களில் ஒருவர்.

கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் நாட்டுப்புற நடனக் காட்சிகளுக்காக 2000 ஆம் ஆண்டில் சிறந்த நடன அமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது.கடந்த ஏப்ரல் மாதம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கலா மாஸ்டர் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் கலா மாஸ்டர் தனது மாணவர்களுடன் சேர்ந்து விருமன் பட பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவரின் ஜூனியர் ஆன சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.