டாப் நடிகைகளை ஓரம் கட்டிய த்ரிஷா…. 100 நாள் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?…. ஆடிப்போன தமிழ் நடிகைகள்….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

டாப் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் திரிஷா. மீண்டும் பட வாய்ப்புகளும் அவருக்கு குவிய தொடங்கியுள்ளன. தற்போது விஜயின் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க திரிஷா கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக 100 நாட்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் திரிஷாவிற்குமூன்று கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 67 படத்தின் திரிஷா தான் நடிக்க வேண்டும் என்பதால் பல கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இவருக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டத்திற்கு காரணம் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தாவை கதாபாத்திரம் தான். அடுத்ததாக அஜித் நடிக்கும் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்திலும் நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.