தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் அதிகம் தான் என்று சொல்ல வேண்டும். ஒரு சில படங்களில் நடித்து மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெரும் நடிகர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர் தான். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் ராஷி கண்ணா, கேத்ரின் தெரெஸா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ’துருவ நட்சத்திரம்’ ஆகியப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தலத்தில் படக்குழுவினருக்கு தோசை சுட்டு கொடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram